டி.ஐ.ஜி ரூபா அதிரடி மாற்றம்: போக்குவரத்து ஆணையராக நியமனம்

டி.ஐ.ஜி ரூபா அதிரடி மாற்றம்: போக்குவரத்து ஆணையராக நியமனம்

பெங்களூர்:பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்காக ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின.இந்த விவகாரம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்படும் சிறப்பு வசதிகளை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா, பெங்களூர் நகர காவல் துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
பெங்களூர் சிறைத் துறை டிஐஜி ரூபா கடந்த வாரம் பரப்பன அக்ரஹார சிறைக்கு ஆய்வுக்கு சென்றார். அப்போது அங்கு நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்தார். மேலும் சசிகலா அறையில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு தனி சமையலறையும், சசிகலாவை பார்வையாளர்கள் சந்திக்க சிறையில் தனி அறையும் இருப்பதையும் ரூபா கண்டறிந்தார். சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகளை ஏற்பாடு செய்ய சிறை டிஐிபி சத்தியநாராயணராவ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.தான் பார்த்தவை குறித்து மாநில டிஜிபி தத்தாவுக்கு அறிக்கையாக அனுப்பினார். இதனால் தமிழகம் மற்றும் கர்நாடகா அரசியலில் புயலை கிளப்பியது.

இதைத் தொடர்ந்து சிறை முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை குழுவை முதல்வர் சித்தராமையா நியமித்தார்.இந்த நிலையில் டி.ஐ.ஜி. ரூபா சிறைத் துறையில் இருந்து அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.