ரயிலில் அடிபட்டு இறந்த பிச்சைக்காரரிடம் ரூ.10 லட்சம் கையிருப்பு

ரயிலில் அடிபட்டு இறந்த பிச்சைக்காரரிடம் ரூ.10 லட்சம் கையிருப்பு

   
மும்பை கோவான்டி பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்று ரெயிலில் அடிபட்டு இறந்த பிச்சைக்காரரிடம் ஒன்றரை லட்சம் ரொக்கம் மற்றும் 8.77 லட்சம் ரூபாய் வைப்பு நிதி இருந்தது தெரியவந்துள்ளது.

மும்பை கோவான்டி பகுதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தவர் புர்ஜு சந்திரா ஆசாத். சிறிய வாடகை வீடு ஒன்றில் வசித்துவந்த இவர் சமீபத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்று ரெயிலில் அடிபட்டு இறந்து விட்டார்.அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உறவினர்களுக்கு தகவல் அளிப்பதற்காக புர்ஜு சந்திராவின் வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர் தனியாக வாழ்ந்து வந்த விபரம் தெரியவந்தது.

அவரது வீட்டை சோதனையிட்டபோது சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் (பெரும்பகுதி நாணயங்களாக) ரொக்கப்பணம் மற்றும் வங்கியில் 8.77 லட்சம் ரூபாய் வைப்பு நிதி இருந்தது தெரியவந்துள்ளது.மேற்படி வைப்பு நிதி தொகைக்கு ராஜஸ்தானில் உள்ள தனது மகனை வாரிசாக நியமித்துள்ளார் புர்ஜு சந்திரா ஆசாத். அந்த தகவலை வைத்து புர்ஜு சந்திரா ஆசாத் மரணமடைந்த செய்தியை அவரது மகனுக்கு போலீசார் தெரியப்படுத்தியுள்ளனர்.