உத்தரப்பிரதேசத்தில் லாரி மீது கார் மோதி 6 பேர் பரிதாப பலி...!!

உத்தரப்பிரதேசத்தில் லாரி மீது கார் மோதி 6 பேர் பரிதாப பலி...!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில் கப்தன்கஞ்ச் பகுதியில் சரக்கு லாரி ஒன்று நேற்று இரவு சாலையோரம் நின்றுகொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த ஒரு கார், லாரியின் மீது பயங்கரமாக மோதியது. 

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் இருந்த புல்கேஷ்(32), அவரது மனைவி ஷிபி(30), மகள் சாரு(4), மூன்று வயது மகன் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
 


Loading...