எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்திய வீரர் பலி

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்திய வீரர் பலி

காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபடுகிறது. இந்திய ராணுவமும் அவர்களுக்கு பதிலடி அளித்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவங்கள் காரணமாக பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எல்லையோர கிராமங்களில் உள்ள மக்கள் பீதியிலேயே உள்ளனர். எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காதி செக்டாரில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்திய ராணுவமும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது. இந்த சம்பவத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவது கண்டனத்திற்குரியது. எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.