தெலுங்கானாவில் பழைய கட்டிடம் இடிந்து விபத்து...60 வயது பெண்மணி உயிரிழப்பு

தெலுங்கானாவில் பழைய கட்டிடம் இடிந்து விபத்து...60 வயது பெண்மணி உயிரிழப்பு

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பழைய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி உயிரிழந்தார்.

தெலுங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டத்தில் பழைய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. விகராபாத் மாவட்டத்தில் உள்ள மொத்குல் கிராமத்திற்கு அருகில் டோமா என்ற பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 60-வயது மதிக்கத்தக்க பெண்மணி உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கட்டிடத்திற்கு அருகில் இருந்தவர்கள் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டனர்.

உள்ளூர் கோவில் உரடம்மா ஜதரா விழாவில் பங்கேற்பதற்காக அவர்கள் வந்திருந்தனர். கோவில் இருந்த அந்த பழைய கட்டிடத்திற்கு அருகில் அமர்ந்திருந்தனர்.விபத்துக்குள்ளான வீடு 15 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் ஓஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.