கொடூரன் தஷ்வந்த் தப்பியோட்டம்

கொடூரன் தஷ்வந்த் தப்பியோட்டம்

சென்னை: தாயை கொன்று, 25 சவரன் நகைகளுடன் தலைமறைவான,  தஷ்வந்த்தை, மும்பையில் போலீசார் நேற்று(டிச.,6) கைது செய்தனர். இதையடுத்து அவனை தமிழகத்திற்கு கொண்டு வர அனுமதிக்க கோரி மும்பை பந்த்ரா கோர்ட்டில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். சென்னை அழைத்து செல்ல அனுமதித்த நீதிபதி, டிச.,9ம் தேதிக்குள் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இந்நிலையில் கோர்ட்டில் இருந்து திரும்பி செல்லும் வழியில், மும்பை விமான நிலையம் அருகில் போலீஸ் பிடியில் இருந்து தஷ்வந்த் தப்பியோடினான். மும்பை போலீசாரின் உதவியோடு அவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.