இன்டெர்வியூவை சுலபமாக எதிர்கொள்வது எப்படி?...உங்களுக்கான டிப்ஸ் இதோ!

இன்டெர்வியூவை சுலபமாக எதிர்கொள்வது எப்படி?...உங்களுக்கான டிப்ஸ் இதோ!

எழுத்தாளர் : ரம்யா 

உங்களுக்கு இன்டெர்வியூக்கு அழைப்பு வந்ததா? நீங்கள் இன்டெர்வியூவிற்கு ஆர்வமாக உள்ளீர்களா? எதுவாக இருந்தாலும், வாழ்த்துகள்! நீங்கள் இந்த கட்டுரையை படித்துகொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் வேலைக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான திசையில், மற்றொரு படியை எடுத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.


ஒரு இன்டெர்வியூவிற்கு தயாராகுதல் என்பது ஒரே இரவில் செய்யகூடியது அல்ல, அப்படி செய்யவும் இயலாது. ஆனால் சில முக்கிய அம்சங்களை பின்பற்றுவது, இன்டெர்வியூவில் நீங்கள் ஒரு நல்ல துவக்கத்தை உருவாக்க உறுதுணையாக இருக்கும்.


▪️இன்டெர்வியூவிற்கு முன்:

கம்பெனி பற்றிய முக்கிய தகவல்களை கம்பெனியின் வெப்சைட், சமூக ஊடக பதிவுகள் மற்றும் சமீபத்திய செய்தி வெளியீடுகள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள். இது கம்பெனியின் இலக்குகளை புரிந்து அதற்கு நீங்கள் எப்படி பொருந்துகிறீர்கள் என தெரிந்து இன்டெர்வியூவை தன்னம்பிக்கையுடன் அணுக உதவும். அதே நேரம், நீங்கள் எப்படி கம்பெனியின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதையும் தயார் செய்து கொள்ளுங்கள், ஏனெனில், இது இன்டெர்வியூவில் கேட்கபட வாய்ப்பிருக்கிறது.


▪️15 நிமிடங்கள் முன்பாகவே இன்டெர்வியூவிற்கு வந்து சேருங்கள்

முன்பே செல்லலாம் ஆனால் தாமதமாக செல்லகூடாது. நீங்கள் செல்ல வேண்டிய வழியை முன்பே ஆராய்ந்து, அதற்கேற்ப தயார்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் பொது போக்குவரத்தில் சென்றால், பாதை மூடல் மற்றும் பிற தாமதங்களை கருத்தில்கொண்டு அதற்கான அதிக நேரத்தை கணக்கிட்டு திட்டமிடுங்கள்.


▪️இன்டெர்வியூவிற்கென ப்ரத்யேகமான ஈமெயில் ஐடியை உபயோகியுங்கள். அது வேடிக்கையாக இருக்ககூடாது.


இன்டெர்வியூவின் பொழுது:


▪️இன்டெர்வியூ செல்லுபோது தன்னம்பிக்கையுடன் எப்போழுதும் விழிப்போடு இருக்க வேண்டும். இன்டெர்வியூ இடத்தில் உள்ளவர்களுடன், புன்முறுவலுடன் பேசுங்கள். இன்டெர்வியூவிற்கு காத்திருக்கும்போது உடன் இருப்பவர்களுடன் அளவோடு பேசுங்கள். அங்கு சுற்றிலும் கம்பெனியை பற்றி வைக்கப்பட்டுள்ள போஸ்டர்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.


▪️டாக்குமென்ட்களை ஒரு நல்ல ஃபோல்டரில் எடுத்து செல்லுங்கள் நிறைய ரெஸ்யூமே பிரதிகள் மற்றும் புகைப்படங்களை எடுத்து செல்லுங்கள். நிறைய இன்டெர்வியூவெர்கள் இருக்கும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிகள் தேவைப்படும். உங்கள் சான்றிதழ்கள், மதிப்பெண் தாள்கள் மற்றும் பிற முக்கியமான டாக்குமென்ட்களை ஒரு ஃபோல்டரில் ஒழுங்காக வரிசைபடுத்தி வையுங்கள். இன்டெர்வியூவில் உங்கள் டாக்குமென்ட்களை கேட்கும்பொழுது, கஷ்டமில்லாமல் தேவையானதை எடுக்கும் வகையில் வைக்கவும். எப்பொழுதும் ஒரு பேனாவை உங்களுடன் வைத்திருங்கள்.


▪️நல்ல நடத்தை மற்றும் உடல் மொழியை பயிற்சி செய்யுங்கள் நீங்கள் கட்டிடத்தில் நுழையும்போதே ஒரு நம்பிக்கையான உடல் மொழியுடன் செல்லுங்கள். நின்றாலும், உட்கார்ந்தாலும் உங்கள் தோள்களையும், தலையையும் நேராக வையுங்கள். இன்டெர்வியூ செய்பவர் கைகுலுக்க கையை முதலில் நீட்டுவார். அப்பொழுது நீங்கள் அவரின் கண்ணை பார்த்து தன்னம்பிக்கையுடன் புன்சிரிப்புடன் கைகுலுக்குங்கள்.


▪️இன்டெர்வியூவின் பொழுது, இன்டெர்வியூவெரிடம் இன்டெர்வியூவிற்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி என மறக்காமல் தெரிவியுங்கள்.


▪️இன்டெர்வியூவில் கேட்கபட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால், தெரியவில்லை என்பதை நேரடியாக சொல்லவும். தெரியாத ஒன்றிற்கு, பதில் அளிக்க முற்பட்டு, நன்பமதிப்பை இழக்க வேண்டாம்.


▪நல்ல அபிப்ராயத்தை ஆரம்பத்திலிருந்தே உருவாக்குங்கள் உங்களுக்கு சௌகரியமாக உள்ள நேர்த்தியான (ஃபார்மல்) உடைகளை அணியுங்கள். முக்கியமாக அவை சுத்தமாகவும், இஸ்திரி போட்டும் இருக்க வேண்டும். இன்டெர்வியூவில் பங்குபெறும் ஒவ்வொருவரையும் நாங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.


இந்த வலைப்பதிவை ரம்யா, க்வாலிட்டி அனலிஸ்ட் எழுதியுள்ளார். அவர் எழுதுவதில் ஆர்வமுடையவர். இந்த வலைப்பதிவு, முழுக்க எழுத்தாளர் கருத்தை அடிப்படையாகக் கொண்டது.

Gyanamite, தமிழில் திறமை மற்றும் வேலைவாய்ப்பை வளர்க்க நிறைய வீடியோக்கள் மற்றும் வலைப்பதிவுகளை கொண்ட தளம். நம் நாட்டில் மாணவர்களையும் இளைஞர்களையும், தொடர்புடைய வேலைவாய்ப்புக்கான திறன்களை வளர்க்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. www.gyanamite.com இல் தொழில் வல்லுநர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமான பயணத்தை தொடங்குங்கள்.