தித்லி புயல்: ஆந்திராவில் 8 பேர் உயிரிழப்பு

தித்லி புயல்: ஆந்திராவில் 8 பேர் உயிரிழப்பு

ஐதராபாத்:வங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி  ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம், ஒடிசாவின் கோபால்பூர் இடையே கரையைக் கடந்தது.  

இந்தநிலையில் தித்லி புயாலால் ஆந்திரத்தின் விஜயநகரம்,  ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தென்னைகளும் வாழைகளும் முறிந்தும் சாய்ந்தும் விழுந்தன. மேலும்  2 மாவட்டங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.  

தித்லி புயலுக்கு விஜயநகரம்,  ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில்  8 பேர் உயிரிழந்தனர். புயல் காரணமாகக் கிழக்குக் கோதாவரி, மேற்குக் கோதாவரி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. கடல் கொந்தளிப்பாக உள்ளதால் நிலைமை சீராகும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.