டெல்லி: பீங்கான் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 2 பேர் பலி

டெல்லி: பீங்கான் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 2 பேர் பலி

தலைநகர் டெல்லியில் உள்ள நவாடா பகுதியில் பீங்கான் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்து தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.விசாரணையில், ஆலையில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என மீட்பு படையினர் தெரிவித்தனர்.