உ.பி.யில் பிச்சைக்காரர்கள் ரூ.1 நாணயத்தை ‘மதிப்பு நீக்கம்’ செய்தனர்

உ.பி.யில் பிச்சைக்காரர்கள் ரூ.1 நாணயத்தை ‘மதிப்பு நீக்கம்’ செய்தனர்

ஒரு ரூபாய் நாணயம் மிகச்சிறிய அளவாக இருப்பதால் அதனைத் தாங்கள் ‘மதிப்பு நீக்கம்’ செய்வதாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிச்சைக்காரர்களில் அறிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநில ராம்பூரைச் சேர்ந்த யாசகர்கள் சிலர் இனி ஒரு ரூபாய் நாணயத்தை யாராவது தங்களுக்கு அளித்தால் அதை வாங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்தார், இப்போது நாங்கள் ரூ.1 நாணயம் அளவில் மிகச்சிறியதாக இருப்பதால் ‘மதிப்பு நீக்கம்’ செய்கிறோம் என உத்தரப்பிரதேச மாநில ராம்பூரைச் சேர்ந்த யாசகர்கள் தெரிவித்துள்ளனர்.