“அடல்” பென்ஷன் திட்ட தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு

“அடல்” பென்ஷன் திட்ட தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு

அடல் பென்ஷன் திட்டத்தின் (ஏபிஒய்) ஓய்வூதிய தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அடல் பென்ஷன் திட்டத்தை 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்தது. தங்களது வயதுக்கு ஏற்றார்போல் மாத பிரீமியம் தொகையை செலுத்தும் நபர்களுக்கு 60 வயதுக்குப் பிறகு மாதம்தோறும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை பென்ஷன் கிடைக்கும்.