பிஹாரில் நேற்று நிருபர்கள் மீது தாக்குதல்

பிஹாரில் நேற்று நிருபர்கள் மீது தாக்குதல்

பிஹார்: ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் பிஹார் துணை முதல்வராக உள்ளார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து செய்தி சேகரிக்க பாட்னாவில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்கள் குவிந்திருந்தனர்.அப்போது மாநில அமைச்சரவை கூட்டம் முடிந்து துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வெளியே வந்தார். அவரிடம் கேள்விகள் எழுப்ப நிருபர்கள் முயன்றனர். அங்கிருந்த துணை முதல்வரின் பாதுகாவலர்கள் நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சில நிருபர்களுக்கு காயம் ஏற்பட்டது.
பிஹாரில் நிருபர்கள் மீது தாக்குதல்