சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி

சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி

சென்னை:  நாடு முழுவதும் வரும் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இதேபோல் அந்தந்த மாநில தலைநகரங்களில் சுதந்திர தின விழாக்கள் கோலாகலமாக நடைபெற உள்ளன. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் சுதந்திர தின விழா நடைபெறும் இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.