மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் பட்ஜெட்: ப.சிதம்பரம்

மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் பட்ஜெட்: ப.சிதம்பரம்

கேரள மாநிலம் கொச்சியில் பட்ஜெட்டின் பார்வையில் இந்தியப் பொருளாதாரம் என்ற தலைப்பில் கருத்தரங்கு இன்று நடந்தது. இதை ராஜீவ்காந்தி கல்வி மேம்பாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது.இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:

மக்களின் ரத்ததத்தை உறிஞ்ச அனுமதிக்கும் ஒழுங்குமுறையாக மத்தியில் ஆளும் பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் இருக்கிறது. மத்திய அரசு மோசமான நோயாளியாக இருந்து கொண்டு நல்ல பொருளாதார ஆலோசகர்கள் எனும் மருத்துவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்காமல் இருந்து வருகிறது.

நாட்டின் முக்கியத்துறைகளான சுகாதாரம், கல்வி, வேளாண்மை, வேலைவாய்ப்பு ஆகியவை பாஜக ஆட்சியில் எந்த வளர்ச்சியையும் அடையவில்லை. பிரதான பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படாமல், அறிவிப்புகளும், மானியங்களும் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.