மீண்டும்  சிறைக்கு திரும்பிய சின்னம்மா

மீண்டும்  சிறைக்கு திரும்பிய சின்னம்மா

பெங்களூர்: சசிகலாவிற்கு வழங்கப்பட்ட 5 நாள் பரோல் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர்  மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு திரும்பினார்.சசிகலாவின் கணவர் உடல்நலக்குறைவால்  சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக, பெங்களூரு சிறையில் இருந்து 5 நாள் பரோலில் வந்துள்ள அவருடைய மனைவியும், அ.தி.மு.க. அம்மா அணி பொதுச்செயலாளருமான சசிகலா தியாகராயநகரில் உள்ள

இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கினார்.தினமும் அவர் தனது கணவரை ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்து வந்தார். சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பரோல் நேற்றுடன் முடிவடைந்தது.  அவரது பரோல் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு திரும்பினார். மாலை மாலை 4.30 மணியளவில் பெங்களூரு சிறைக்கு சென்றடைந்தார். அதன் பின்னர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.