மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு என ஒரு கோடிக்கும் மேலானவர்கள் பயன் பெறுவார்கள்.

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2 சதவீத அகவிலைப்படி உயர்வும், ஜூலை மாதம் முதல் ஒரு சதவீத அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டது. இதுவரை மொத்தம் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேலும் 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்றுகூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.