வாகன கட்டுப்பாடு திட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்த டெல்லி அரசு

வாகன கட்டுப்பாடு திட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்த டெல்லி அரசு

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடுவதை தவிர்க்கும் வகையில், ஒற்றப்படை தேதிகளில்  ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்களையும், இரட்டைப்படை தேதிகளில் இரட்டைப்படை எண் கொண்ட வாகனங்களையும் இயக்க அரசு முடிவு செய்தது. வருகிற 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வாகனங்களுக்கான ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு முறை அமல்படுத்தப்படும்  என டெல்லி அரசு கூறியது. இத்திட்டம் அமலில் இருக்கும் 5 நாட்களிலும் மக்கள் மாநில அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் டெல்லி  தெரிவித்து இருந்தது. 

மேலும், பெண்கள் இரு சக்கர வாகனங்கள், அரசு அதிகாரிகள் வாகனங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், இந்த விவகாரத்தில் தலையிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், பெண்கள், இரு சக்கர வாகனங்களுக்கு விலக்கு அளிக்க கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.இந்த நிலையில், பெண்களுக்கு வாகன கட்டுப்பாடு திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படாததால், அதிருப்தி அடைந்துள்ள டெல்லி அரசு, இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.