கடும் பனிப்பொழிவால்  டெல்லியில் ரெயில் சேவை பாதிப்பு

கடும் பனிப்பொழிவால்  டெல்லியில் ரெயில் சேவை பாதிப்பு

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.  மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகினர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்கள் சென்றன. 

பனிப்பொழிவு நிலவுவதால் ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கடும் பனிப்பொழிவால் 47 ரயில்கள் வருகை நேரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் 14 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.