நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

மலையாள நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கேரளாவில் பிரபல நடிகையை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நடிகர் திலீப் ஜாமீன் மனுவை முதன்முதலில் அங்கமாலி நீதிமன்றம் மறுத்தது. இதனையடுத்து அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.ஏற்கெனவெ 4 முறை திலீப் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். திலீப் ஜாமீன் மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது, திலீப் கைதாகி 85 நாட்களுக்கு மேலாகியும் குற்றப்பத்திரிக்கை  தக்கல் செய்யப்படவில்லை என்பதை நீதிமன்றத்தில் திலீபின் வழக்கறிஞர் சுட்டிக் காட்டி வாதாடினார். குற்றப்பத்திரிக்கை  தக்கல் செய்யப்படடததை காரணம் காட்டி ஜாமீன் வழங்கபட்டது.அரசு தரப்பில் திலீப் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைப்பார் என்று வாதிடப்பட்டது.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி திலீப்புக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.அவர் வெளிநாடு செல்லாமல் இருப்தற்காக பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.