வைர வியாபாரி நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பி ஓட்டம்

வைர வியாபாரி நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பி ஓட்டம்

டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்த குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பி சுவிட்சர்லாந்துக்கு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி சிபிஐயிடம் புகார் அளித்தது.இதையடுத்து நீரவ் மோடி மீது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு வழக்குகள் பதிவு செய்துள்ளன. நீரவ் மோடிக்கு உடந்தையாக இருந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் அதிகாரிகள், ஊழியர்கள் சிக்கியுள்ளனர்.