தமிழக விவசாயிகள் டெல்லியில் மீண்டும் போராட்டம்

தமிழக விவசாயிகள் டெல்லியில் மீண்டும் போராட்டம்

டெல்லி: டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் மீண்டும் துவங்கியது. இதில் கலந்து கொண்டவர்கள் தம் கைகளில் சங்கிலிகளை கட்டிக் கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் போராடினர்.எங்கள் போராட்டத்திற்கு பின் சுமார் 1000 பேர் மீது தமிழக அரசு வழக்குகள் பதிவு செய்துள்ளது. 10,000 பேர்களது அடமான நகைகள் ஏலம் விடப்பட்டுள்ளன. எனவே, மீண்டும் டெல்லியில் போராடும் நிலைக்கு தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டு விட்டனர். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாம் இங்கு தொடர்ந்து போராடுவோம்' எனத் தெரிவித்தார்.இந்தமுறை மீண்டும், ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் துவக்கியுள்ள போராட்டத்தின் முதல் நாளில் கைகளில் சங்கிலிகளைக் கட்டி வைத்துள்ளனர். 
கடந்த முறை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, தமிழக விவசாயிகள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தினர். தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு அதன் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமை வகித்திருந்தார். தமிழகம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக 41 நாள் நடைபெற்றதிற்கு காங்கிரஸ், இடதுசாரி, திமுக உட்படப் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நேரில் வந்து ஆதரவளித்திருந்தனர். இதனால், வெற்றிகரமாகத் தொடர்ந்த போராட்டத்தை கைவிடுமாறு மத்திய கப்பல் மற்றும் தரைவழிப்போக்குவரத்து அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பலமுறை நேரில் வந்து கோரியிருந்தார். பிறகு, தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நேரில் வந்து ஜந்தர் மந்தரில் பேசிய கேட்டுக் கொண்ட பின் விவசாயிகள் கைவிட்டனர். அப்போது தமிழகம் மற்றும் மத்திய அரசால் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என தமிழக விவசாயிகள் டெல்லியில் மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
 


Loading...