வெளிநாட்டு வக்கீல்கள் இந்தியாவில் தொழில் செய்ய முடியாது

வெளிநாட்டு வக்கீல்கள் இந்தியாவில் தொழில் செய்ய முடியாது

புதுடெல்லி:வெளிநாட்டு வக்கீல்கள் இந்தியாவுக்கு வந்து, வக்கீல் தொழில் செய்ய முடியாது. இதே போன்று வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் சார்பில் இந்தியாவுக்கு வந்து சட்ட சேவைகள் வழங்க முடியாது.இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட சட்ட நிறுவனங்களின் வாதங்களை கேட்டறிந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தனர்.மேலும் வெளிநாட்டு வக்கீல்கள் இந்தியாவுக்கு வந்து இங்கு உள்ள நீதிமன்றங்களில் வெளிநாட்டு சட்ட வழக்குகளில், சர்வதேச சட்ட விவகாரங்களில் ஆஜராகி விட்டு, திரும்ப செல்வதற்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மாற்றி அமைத்தனர்.
தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும் பி.பி.ஓ. (அயலக சேவை வழங்கல்), இந்தியாவில் சட்ட தொழிலை நிர்வகிக்கும் சட்டங்களின் வரம்புக்குள் வரவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.