மத்திய பிரதேசத்தில் சரக்கு ரயில் விபத்து.

மத்திய பிரதேசத்தில் சரக்கு ரயில் விபத்து.

சத்னா: மத்தியபிரதேசத்தில் சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதில் 10 பெட்டிகள் தடம்புரண்டன. மத்திய பிரதேச மாநிலம் சத்னா என்ற பகுதியில் நேற்று நள்ளிரவில் மும்பை-ஹவுரா செல்லும் ரயில்பாதையில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.சத்னா ரீவா பகுதியில் ரயிலின் 13- வது பெட்டி திடீரென தடம் புரண்டது. இதையடுத்து பின்னால் இருந்த மேலும் 10 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி தடம் புரண்டன.

தகவலறிந்த ரயில்வே மீட்பு படையினர் தண்டவாளத்தை இரவோடு இரவாக சீரமைத்தனர். இந்த விபத்தில் உயிர் சேதம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரயில் தடம்புரண்டதற்கு சதிவேலை ஏதும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.