பாஸ்போர்ட்டில் இனி முகவரி அச்சிடப்படாது - வெளியுறவுத்துறை

பாஸ்போர்ட்டில் இனி முகவரி அச்சிடப்படாது - வெளியுறவுத்துறை

டெல்லி: பாஸ்போர்ட் இனி முகவரி அடையாளத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்றும், விரைவில் முகவரி பக்கமே அச்சடிக்கப்போவதில்லை என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் உரியவரின் பெயர், தந்தை மற்றும் தாயின் பெயரோடு முகவரியும் அச்சிடப்பட்டு வந்தது.இவ்வாறு அச்சிடப்பட்டு வந்த முகவரியை கொண்டு பல முறைகேடுகளும், போலி பாஸ்போர்டுகளும் தயாரிக்கப்படுவதால் எழுந்த சர்ச்சையை  எழுந்தது. அதை தொடர்ந்து இனி  பாஸ்போர்ட்டில் முகவரி அச்சிடப்படாது என்று  வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.