இடுக்கி அணையில் அனைத்து மதகுகளும் திறக்கபட்டது

இடுக்கி அணையில் அனைத்து மதகுகளும் திறக்கபட்டது

திருவனந்தபுரம்: கேரளாவில்  2403 அடி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையும் நிரம்பி வருகிறது. இன்னும் 2 அடி தண்ணீர் பெருகினால் அணை முழு கொள்ளவை எட்டி விடும். இன்று அதிகாலையில் அணையின் நீர் மட்டம் 2401 அடியை எட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி அணையின் மதகுகளை திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

நேற்று மாலை அணையின் ஒரு மதகு திறக்கப்பட்டு வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இன்று அதிகாலையில் அணையின் மேலும் 5 மதகுகள் திறக்கப்பட்டு கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இடுக்கி அணையில் கடந்த 1992-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதகுகள் திறக்கப்பட்டது. அதன் பிறகு 26 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அணையை திறக்கும் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது.இடுக்கி அணை திறக்கப்பட்டதால் இடுக்கி, செறுதோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.