இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சலில் எஸ்.பரேக் நியமனம்

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சலில் எஸ்.பரேக் நியமனம்

புதுடெல்லி: இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சாலில் எஸ் பாரீக்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜனவரி 2-ம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவர் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று கூறப்படுகிறது.  சலில் எஸ்.பரேக் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலை பொறியியல் படிப்பையும்,   இயந்திர பொறியியல் படிப்பை முடித்துள்ளார்.  மும்பை ஐஐடியில் ஏரோ நாட்டிகல் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். 

ஐடி சர்வீசஸ் துறையில் உலகளாவிய அளவில் 30 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.