கலப்பு திருமணமா! அப்போ ரூ.1 லட்சம்  கிடைக்கும்: ஒடிஷா அரசு

கலப்பு திருமணமா! அப்போ ரூ.1 லட்சம்  கிடைக்கும்: ஒடிஷா அரசு

புவனேஸ்வர்: நாடு முழுவதும் கலப்பு திருமணதிற்கு  எதிராக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது.அந்த வகையில் கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் கலப்பு திருமண தம்பதியருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ஒடிஷா அரசு அறிவித்துள்ளது.மேலும், இந்தத் தொகை பணமாகக் கையில் கொடுக்கப்பட மாட்டாது. நிலமாகவோ, வீட்டுக்குத் தேவையான பொருட்களாகவோ வழங்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

சமூகத்தில் சாதி வேறுபாடுகள் இன்றி சமத்துவத்தை ஏற்படுத்த ஒடிஷா மாநில அரசு கலப்பு திருமணங்களை ஊக்குவித்து வருகிறது. கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியருக்கு ரூ. 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.கடந்த 2007ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்து கொள்வோருக்கான தொகை 10 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக ஒடிஷா அரசு உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது அந்தத் தொகை இரட்டிப்பாக்கப்பட்டு ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தொகையை பெறத் திருமணம் செய்து கொண்டவர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.