ஜனவரி 29-ம் தேதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி அழைப்பு

ஜனவரி 29-ம் தேதி பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி அழைப்பு

புதுடெல்லி: பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 29-ம் தேதி கூட்டுவதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். 

குஜராத் உள்ளிட்ட சில மாநில சட்டசபை தேர்தலுக்கு பின்னர் 2017-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-12-2017 அன்று தொடங்கியது.  மொத்தம் 61 மணி நேரம் நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 78 சதவீதம் ஆக்கப்பூர்வமான பணிகள் நடைபெற்றுள்ளன. முத்தலாக் உள்ளிட்ட 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர், தேதி குறிப்பிடப்படாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 
வரும் 29-ம் தேதி காலை 11 மனியளவில் பாராளுமன்ற மைய அரங்கில் இரு அவைகளை சேர்ந்த உறுப்பினர்களிடையே ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.  இந்தியாவின் பொருளாதாரம் சார்ந்த அறிவிப்புகள் அவரது உரையில் இடம்பெறும்.