காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எந்தவித தாக்குதல் சம்பவத்திலும் பாதுகாப்பு படையினர் ஈடுபடாமல் இருந்து வந்தனர். 

இந்தநிலையில் ரம்ஜான் பண்டிகை முடிவடைந்ததை தொடந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட போது 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.