கத்துவா சிறுமி கற்பழிப்பு வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைப்பு

கத்துவா சிறுமி கற்பழிப்பு வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்குமாறு காஷ்மீர் மாநில முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி அம்மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.