இயற்கை நிறைந்ததாக  கருதப்படும்  கேரளா வறட்சி மாநிலமாக அறிவிப்பு

இயற்கை நிறைந்ததாக  கருதப்படும்  கேரளா வறட்சி மாநிலமாக அறிவிப்பு

இயற்கை சூழலும் அழகும் நிறைந்த மாநிலமாக கருதப்படும் கேரள மாநிலம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை ஏமாற்றியது. வழக்கமாக பெய்யும் அளவை விட குறைவாக பெய்ததே வறட்சி காரணம்.
 
கேராளாவில் உள்ள 14 மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக மந்திரி சந்திரசேகரன் சட்டசபையில் தெரிவித்தார். அதோடு 2 மாதங்களுக்கு தொடர் மழை பெய்தாலும் இந்த மழை குறைவை ஈடுகட்டமுடியாது என்றும் கூறினார்.