கேரளா: பாதிரியார்களால் பெண் பாலியல் கொடுமை...விரிவான அறிக்கை கேட்கும் தேசிய மகளிர் ஆணையம்

கேரளா: பாதிரியார்களால் பெண் பாலியல் கொடுமை...விரிவான அறிக்கை கேட்கும் தேசிய மகளிர் ஆணையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மலங்கரா தேவாலயத்தை சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். அதே தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாருடன் அந்தப் பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு உறவு இருந்துள்ளது. அவர் தனது இரண்டாம் மகளின் ஞானஸ்னான சமயத்தில் இதை எண்ணி மன உளைச்சலில் இருந்துள்ளார். அதனால் அந்த தேவாலயத்தை சேர்ந்த ஒரு பாதிரியிடம் அவர் தனது உறவு குறித்து தெரிவித்து பாவமன்னிப்பு பெற்றுள்ளார்.

அந்தப் பெண் கூறியதை பதிவு செய்த பாதிரியார் அதை அவருடைய கணவரிடம் சொல்வேன் என மிரட்டி அவரை பலாத்காரம் செய்துள்ளார். அந்த நிகழ்வை அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்த அந்த பாதிரியார் அதே தேவாலயத்தைச் சேர்ந்த மற்ற பாதிரியார்களுடன் பதிர்ந்துக் கொண்டுள்ளார். அவர்களும் இந்தப் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோ டெல்லியைச் சேர்ந்த ஒரு பாதிரியாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த டில்லி பாதிரியார் கேரளா வந்து ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து இந்தப் பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். ரூம் காலி செய்யும் போது பாதிரியார் பணம் கொடுக்காமல் இந்தப் பெண்ணை பணம் கட்ட சொல்லி இருக்கிறார். அந்தப் பெண் தனது டெபிட் கார்டின் மூலம் ரூம் பில்லை செட்டில் செய்துள்ளார். அந்த டெபிட் கார்ட் மெசேஜ் அவருடைய கணவருக்கு சென்றுள்ளது. இந்த விவகரம் தொடர்பில் பெண்ணை அவர் கணவர் விசாரித்த போது நடந்தவைகளை சொல்லி அந்தப் பெண் கதறி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து அந்தக் கணவன் ஆர்தடாக்ஸ் தேவாலய தலைவருக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு உத்தரவிட்ட தேவாலயம் புகாரில் குறிப்பிட்டவர்களில் ஐந்து பேரை இடை நீக்கம் செய்துள்ளது.   இந்நிலையில் இந்த  சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம்  விசாரணை நடத்தி வருகிறது.  இந்த விவகாரத்தில் விரிவான  அறிக்கை அளிக்க கேரள மாநிலம் டி.ஜி.பி. மற்றும் மாநில காவல்துறை தலைவருக்கு மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.