கேரள சட்டப்பேரவை மூன்றாவது நாளாக முடக்கம்

கேரள சட்டப்பேரவை மூன்றாவது நாளாக முடக்கம்

திருவனந்தபுரம் :கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. அங்கு தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில் இந்து அமைப்புகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
 கேரள சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சட்டசபையில் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை கடந்த இரு தினங்களாக ஒத்திவைக்கப்பட்டது.