கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு


கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சொந்தமான சாகர் பூஷன் கப்பலில் இன்று பராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது கப்பலில் இருந்த டேங்கர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதன்காரணமாக அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. உடனடியாக தீயணைப்பு படையினர் கப்பலுக்கு சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்பு பணி நடைபெற்று வருகிறது.