கொல்கத்தா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 20 பசுக்கள் பலி

கொல்கத்தா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 20 பசுக்கள் பலி

வடமேற்கு டெல்லியில் நாரெல்லா பகுதியில் சென்றுகொண்டிருந்த கொல்கத்தா சதாப்தி எக்ஸ்பிரஸ் மோதி 20 பசுக்கள் கொல்லப்பட்டன. இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

டெல்லியை அடுத்த காலெனுக்கும் நாரெல்லாவுக்கும் இடையில் நேற்று மாலை 5.44 மணியளவில் நியூடெல்லி-கல்கா சதாப்தி எக்ஸ்பிரஸ் வந்துகொண்டிருந்தது.  ரயில் முழுவேகத்தில் வந்துகொண்டிருந்தபோது அச்சமயம் இருப்புப் பாதையை கடந்துசெல்ல முயன்ற 20 பசுக்கள் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தன.
ரயில் பாதையில் மாட்டு மந்தையைக் கண்டபோது ரயிலின் ஓட்டுநர் எமர்ஜென்ஸி பிரேக்கை பயன்படுத்தியுள்ளார். ஆனால் ரயில் முழுவேகத்தில் சென்றுகொண்டிருந்ததால் மாடுகள் தப்பிக்க நேரமில்லாமல் போய்விட்டது. அதற்குள் ரயில் வேகமாக அவற்றைக் கடந்து சென்றது.