நாட்டின் முதல் மகளிர் ஸ்பெஷல் ரயில் நிலையம்

நாட்டின் முதல் மகளிர் ஸ்பெஷல் ரயில் நிலையம்

மும்பை: மும்பையில் உள்ள மாதுங்கா ரயில் நிலையம் நாட்டின் முதல் 'மகளிர் ஸ்பெஷல்' ரயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் நிர்வாகி என அனைத்து ஊழியர்களுமே பெண்கள் தான்.மாதுங்கா ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட அனைத்து பதவிகளிலும் பெரும்பாலும் ஆண் ஊழியர்களே பணிபுரிந்து வந்தனர். தற்போது இது மகளிர் சிறப்பு ரயில் நிலையமாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆண் ஊழியர்களுக்குப் பதில் அனைவரும் பெண் ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால்  நாட்டின் முதல் 'மகளிர் ஸ்பெஷல்' ரயில் நிலையம் என்ற பெருமையை மாதுங்கா ரயில் நிலையம் பெற்றுள்ளது.