மாயாவதி -அகிலேஷ் கூட்டணி உறுதி

மாயாவதி -அகிலேஷ் கூட்டணி உறுதி

புதுடெல்லி: வரும் பாராளுமன்றதேர்தலில்  உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ்  கட்சியும், சமாஜ் வாதி கட்சியும் கூட்டணிவைத்து போட்டியிடுகின்றன. 
இது தொடர்பாக பகுஜன் சமாஜ்  கட்சி தலைவர் மாயாவதியும், சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் டெலியில் கூட்டாக இன்று பேட்டி அளித்தனர்.பகுஜன் சமாஜ்  கட்சி தலைவர் மாயாவதி கூறியதாவது:
  நாட்டின் நலனுக்கா இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறோம். மக்களின் மனம் அறிந்து செயல்பட்டால் கூட்டணியை தாண்டி தேர்தலில் வெற்றி பெறுவோம். எங்களது இந்த கூட்டணியை பார்த்து பாஜக அஞ்சுகிறது.
  பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் தலா 38 இடங்களில் போட்டியிடுகின்றன. அமேதி, ரேபரேலியில் போட்டியிடவில்லை. மற்ற இரு இடங்கள் மற்ற கட்சிகளுக்காக.  என கூறினார்.