ஆளும் அரசு மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் மோடிக்கு முதலிடம்

ஆளும் அரசு மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் மோடிக்கு முதலிடம்

ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் ஆளும் அரசாங்கத்தின்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள்’ என்னும் ஆய்வை சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு  நடத்தியது.ஆய்வுக்கான முடிவை பிரபல நாளிதழான போர்ப்ஸ் ’Government at a Glance 2017’ என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது.அந்த ஆய்வு பட்டியலில் இந்தியா 73 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 73 சதவீத மக்கள் அரசாங்கம் மீது அதிக நம்பிக்கையை கொண்டிருப்பதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கு அடுத்தப்படியாக கனடா 62 சதவீதம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. 58 சதவீதத்துடன் துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகள் முறையே மூன்று மற்றும் நான்காவது இடத்தை பெற்றுள்ளன.வல்லரசில் வலுவாக உள்ள அமெரிக்கா 30 சதவீதம் பெற்று 10வது இடத்தில் உள்ளது.


Loading...