பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மெக்ரானுடன் வாரணாசியில் படகு சவாரி

பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மெக்ரானுடன் வாரணாசியில் படகு சவாரி

வாரணாசி: பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரானுடன் வாரணாசி பகுதியில் படகு சவாரி மேற்கொண்டார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரான் 4 நாள் அரசு முறை பயணமாக கடந்த 9ஆம் தேதி இந்தியா வந்தார். அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். கடந்த 10 ஆம் தேதி பிரதமர் மோடி - பிரான்ஸ் அதிபர் மெக்ரான் இடையே இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அப்போது அணுசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரானும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் வந்தனர். இதன் ஒருபகுதியாக வாரணாசி சென்ற அவர்கள் அஸி காட் பகுதியில் படகு சவாரி மேற்கொண்டனர்.