மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை :சென்னை ஹைகோர்ட்

மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை :சென்னை ஹைகோர்ட்

சென்னை: அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடவேண்டும் என்பது கட்டாயமில்லை என சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார்.

இதேபோல கடந்த ஞாயிறு அன்றும், திருப்பூரில் கூட்டத்திலும் கலந்து கொண்ட பிரதமர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அரசு நிகழ்ச்சியான இந்த இரண்டிலுமே தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடப்படவில்லை.

தேசியகீதம் பாடுவது தொடர்பாக வேம்பு என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றினையும் தொடுத்தார்.  இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.அப்போது, பிரதமர் பங்கேற்கும் விழாவில் தேசிய கீதம் பாட வேண்டுமென்று கட்டாயமில்லை என்று கோர்ட் தெரிவித்து விட்டதுடன், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டது.