அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை

அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையின் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. 

இதையடுத்து அம்பேத்கர் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செய்தார். அதன் பின்னர், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.