அர்ஜென்டினா புறப்பட்டார் பிரதமர் மோடி

அர்ஜென்டினா புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி: இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட உலகின் வளர்ந்த நாடுகள் அங்கம் வகிக்கும்   'ஜி-20'  13-வது மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் நவ.,30 முதல் டிச.,1 வரை நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்கள் பயணமாக இன்று அர்ஜென்டினா புறப்பட்டு சென்றார். டிசம்பர் 2–ந் தேதி அவர் இந்தியா திரும்புகிறார். அங்கு சீன அதிபர் ஜின்பிங், அமெரிக் அதிபர் டிரம்ப்பையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.