மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

மராட்டிய மாநிலம் மும்பையின் வோர்லி பகுதியில் 33 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. குடியிருப்பின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை வீரர்கள் 10 வாகனங்கள், சிறப்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். 

அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் பிடித்துள்ள தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகிறது. குடியிருப்பு கட்டடத்தில் இருந்து 90 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர், தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது