மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நரேஷ் ஹரிஷ்சந்திர பாட்டீல் பதவி ஏற்றார்

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நரேஷ் ஹரிஷ்சந்திர பாட்டீல் பதவி ஏற்றார்

மும்பை: மும்பை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த விஜய தஹில் ரமணி சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக கடந்த ஆகஸ்டு மாதம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து மும்பை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நரேஷ் ஹரிஷ்சந்திர பாட்டீல் இருந்து வந்தார்.இந்தநிலையில், அவர் மும்பை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவி ஏற்பு விழா நேற்று மும்பை மலபார்ஹில்லில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்தது.