சாலையில் நடனமாடிய முஸ்லீம் மாணவிகளை விமர்சனம் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு

சாலையில் நடனமாடிய முஸ்லீம் மாணவிகளை விமர்சனம் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு

மலப்புரம்: கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் டிசம்பர் 1 ம் தேதி எய்ட்ஸ் தினத்தன்று விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மாணவிகள் சாலையில் நடனம் ஆடினர். 
முஸ்லீம் மாணவிகள் இது போன்று சாலையில் ஆடுவது இஸ்லாம் மதத்தை அவமதிப்பதாகும் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சம்பந்தபட்ட  மாணவிகளுக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது. 

இந்நிலையில், விமர்சனம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கேரள மகளிர் கமிஷன் தலைவர் எம்.சி. ஜோசபின், சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''மூன்று பெண்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இது கேரள கலாச்சாரத்திற்கு எதிரானது. இதுபோன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.