மராட்டியத்தில் நிரவ் மோடியின் சொகுசு பங்களா வெடிவைத்து தகர்ப்பு

மராட்டியத்தில் நிரவ் மோடியின் சொகுசு பங்களா வெடிவைத்து தகர்ப்பு

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர். மராட்டியத்தின் அலிபாக் பகுதியில் கடற்கரையை ஒட்டி 33,000 சதுர அடியில் கட்டிய பங்களா,  கடற்கரை ஒழுங்குமுறை  மண்டலத்தின் விதிமுறைகளை மீறியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம் பங்களாவை இடிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து பங்களாவை நீதிமன்ற உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம் வெடிவைத்து தகர்த்துள்ளது.