ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இன்று நாடு முழுவதும் 32 மாநில தலைநகர்களில் 14ஆவது குடியரசுத் தலைவருக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்த்தும், காங்கிரஸ் வேட்பாளராக மீராகுமாரும் களம் இறங்கியுள்ளனர். ஜனாதிபதி தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் ராம்நாத் கோவிந்தும் பங்கேற்றார்.அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-பிரதமராக மொரர்ஜி தேசாய் பதவி வகித்தபோது அவரது உதவியாளர் போல் ராம்நாத் கோவிந்த் செயல்பட்டார். அவரது வெற்றிக்கு முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்கிறேன். அவருக்கு எனது அரசு முழு ஒத்துழைப்பையும் அளிக்கும்.ராம்நாத் கோவிந்த், மீரா குமார் ஆகிய 2 ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களை ஆதரிக்கும் கட்சிகளின் பிரசாரம் கண்ணியமாக இருந்தது. இது இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியை காட்டுகிறது என பிரதமர் கூறினர்.