முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை விவகாரம்:  ராகுல் காந்தி திடீர் கைது

முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை விவகாரம்:  ராகுல் காந்தி திடீர் கைது

டெல்லி:ராணுவத்தினருக்கான ”ஒரு தகுதி ஒரு ஓய்வூதியம்” திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதில் உள்ள முரண்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராம் கிஷன் கிரிவால் என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது சடலத்தைக் காண பல்வேறு அரசியல் தலைவர்களும் வந்த வண்ணம் உள்ளனர். 
 
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ராம் கிஷன் உடலைக் காணவும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், ராம் கிஷன் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வந்தார். ஆனால், அவரை உள்ளே விட மறுத்த போலீசார், அவரை கைது செய்தனர். கலவரம் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக, முன்னெச்சரிக்கை  நடவடிக்கை காரணமாக இந்த கைது நடைபெற்றது என்று போலீசார் கூறியுள்ளனர்.
 
ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட தகவல் வெளியானவுடன், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாரக்ள்.


Loading...