உறவினர்களுக்கு உறுப்புகளை தானம் செய்ய கைதிகளுக்கு அனுமதி: கேரள அரசு

உறவினர்களுக்கு உறுப்புகளை தானம் செய்ய கைதிகளுக்கு அனுமதி: கேரள அரசு

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.  இதில், மாநில சிறைகளில் உள்ள கைதிகள் தங்களது உறுப்புகளை நன்கொடையாக அளிக்க அனுமதி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

எனினும் இதில் சில குறிப்பிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு உள்ளன.  கைதிகள் தங்களது நெருங்கிய உறவினர்களுக்கே உறுப்புகளை நன்கொடையாக அளிக்க முடியும்.  கைதிகளை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றத்தின் அனுமதி பெறுவதுடன், மருத்துவ வாரியமும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கைதி நன்கொடை அளித்த பின் மருத்துவமனையில் தங்கும் காலம் பரோல் ஆக கருதப்படும்.  மருத்துவ செலவுகளை சிறை துறை கவனிக்கும்.  உறுப்பு நன்கொடை அளிப்பதற்காக கைதிக்கு தண்டனை காலத்தில் சலுகைகள் வழங்கப்படாது என அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.