டுவிட்டரில் இணைந்த பிரியங்கா காந்தி

டுவிட்டரில் இணைந்த பிரியங்கா காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பு வகித்து வருகிறார்.  இவரது சகோதரி பிரியங்கா காந்தி (வயது 47).  கடந்த வாரம் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.  அவருடன் உத்தர பிரதேச மேற்கு பகுதி பொது செயலாளராக ஜோதிராதித்ய சிந்தியா நியமிக்கப்பட்டார்.இதனை தொடர்ந்து பிரியங்கா உத்தர பிரதேசத்திற்கு இன்று முதன்முறையாக சென்றார்.  அவர், சமூக வலைத்தளத்தில் ஒன்றான டுவிட்டரில் இணைந்து உள்ளார்.  இதுவரை பதிவு எதனையும் வெளியிடவில்லை.